×

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா: அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாகப்பட்டினம்,ஆக.26: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9ம் வரை நடைபெறுகிறது.  விழா காலங்களில் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணி பேரலாயம் வந்து செல்வார்கள். பக்தர்கள் நலனை கருதி சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஓரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், நாகூர் காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

பக்தர்கள் திரும்ப செல்ல வேளாங்கண்ணியிலிருந்தும் வரும் 28ம் தேதி முதல் 9ம் தேதி இரவு, பகல் என எந்தநேரமும் சிறப்பு பஸ்கள் குடந்தை கோட்டம் சார்பில் இயக்கப்பட உள்ளது. அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்படும் என மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.

The post வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா: அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Velankanni Cathedral ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில்...